உயர் கல்வித்துறை அமைச்சரின் அலுவலக அதிகாரி பணி நீக்கம்: ஸ்பா'வில் கைது செய்யப்பட்டதால் நடவடிக்கை

2 டிசம்பர் 2025, 10:00 AM
உயர் கல்வித்துறை அமைச்சரின் அலுவலக அதிகாரி பணி நீக்கம்: ஸ்பா'வில் கைது செய்யப்பட்டதால் நடவடிக்கை

கோலாலம்பூர், டிச 2-  உயர்கல்வித்துறை துணை அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிர்வாக மற்றும் இராஜதந்திர அதிகாரி (PTD) ஒருவர், அண்மையில் 'சமூகத்துக்கு ஒவ்வாத ஸ்பா' (songsang spa) ஒன்றில் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக பதவி விலகுமாறு உத்தரவிடப் பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுச் சேவையின் ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்கும் நோக்கிலும், வெளிப்படையான நிர்வாகக் கொள்கைகள் மீதான அமைச்சின் உறுதியைக் காண்பிக்கும் வகையிலும் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப் பட்டதாக உயர் கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் (Datuk Mustapha Sakmud) தெரிவித்தார்.

அமைச்சின் ஒருமைப்பாடு பிரிவு (Unit Integriti KPT), சேவை விதிமுறைகளுக்கு ஏற்ப ஒழுங்கு நடவடிக்கைக்கான உள்நாட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். “சட்ட நடவடிக்கை மற்றும் நிர்வாகச் செயல்முறைகளிலிருந்து யாரும் விலக்கு பெற முடியாது என்பதை உயர்கல்வி அமைச்சு (KPT) வலியுறுத்துகிறது. ஒருமைப்பாடு பிரிவின் விசாரணை முடிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்,” என்று அவர் நேற்று இரவு ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்தார். நடந்து வரும் விசாரணைச் செயல்முறையை தாம் மதித்து நடப்பதாகவும், விசாரணையின் நேர்மையைப் பாதிக்கக்கூடிய ஊகங்களைத் தவிர்க்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் முஸ்தபா கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, கடந்த நவம்பர் 28-ஆம் தேதி இரவு 8 மணியளவில், கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவ்வில் (Jalan Raja Laut) உள்ள ஒரு சுகாதார மையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், சமூகத்துக்கு ஒவ்வாத (songsang) நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 19 முதல் 60 வயதுக்குட்பட்ட 201 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் காவல்துறை, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) மற்றும் ஃபெடரல் பிரதேச இஸ்லாமிய சமயத் துறை (JAWI) ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. கைது செய்யப்பட்ட 201 பேரில், 17 பேர் அரசு ஊழியர்கள் ஆவர். அவர்களில் அறுவை சிகிச்சை மருத்துவர், துணை அரசு வழக்கறிஞர், நிர்வாகத் தூதரக அதிகாரி, ஆசிரியர்கள் மற்றும் அமலாக்க நிறுவன அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.