செராஸ், டிச 2- கோலாலம்பூர், கம்போங் செராஸ் பாருவில் (Kampung Cheras Baru) தனது காதலியின் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு மாமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், ஒரு மாணவர் PVC குழாயால் தாக்கப்பட்டதில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்தது. பாதிக்கப்பட்ட 22 வயதுடைய மாணவர் தனது காதலியைக் கார் மூலம் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 1.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் கைருல் அன்வார் காலித் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் கால்களை PVC குழாயால் காதலியின் சகோதரர்கள் தாக்கியதுடன், அவரது முகத்தில் இரத்தம் வரும் வரை குத்தியதாகவும் அவர் கூறினார்.
மேலும், காதலியின் மாமா, மாணவர் தனது மருமகளை மீண்டும் வெளியே அழைத்துச் சென்றால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் பின்னர் அதிகாலை 4.50 மணியளவில் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறைப் புகார் அளித்துள்ளார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


