கோலாலம்பூர், டிச 2- கடந்த சில நாட்களாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல், சமூகத்தைக் குழப்புவது மட்டுமல்லாமல், இன நல்லிணக்கத்தை குலைப்பதற்கும், மக்கள் மத்தியில் தவறான புரிதலை தூண்டுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பலதரப்பட்ட மதிப்புகளுக்கு மதிப்பளித்து, மதம், கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளம் தொடர்பான ஒவ்வொரு பிரச்சனையும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும் என்று KPM வலியுறுத்துகிறது.
சிலைகளை அகற்றுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு எந்த ஒரு உத்தரவோ, கடிதமோ அல்லது குறிப்போ வழங்கப்படவில்லை என்று ஜொகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, திருவள்ளுவர் சிலை ஜொகூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் அகற்றப்பட விருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், சில குழப்பவாதிகள் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி திரு. தியாகராஜ் சங்கர நாராயனன் கேட்டுக்கொண்டர்.


