கோலாலம்பூர், 2 டிசம்பர் : மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா இன்று மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலை 10.40 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த மோசமான வானிலை இன்று பிற்பகல் 2 மணி வரை மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத்தின் தங்காக், மூவார், பத்து பாஹட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு பகுதிகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னலுடன் கூடிய கனமழை அதிகமாக பெய்யும் சாத்தியம் இருப்பதாலும், மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என அறிகுறிகள் தென்பட்டதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது ஒவ்வொரு முறை வெளியிடப்படும் போது அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும்.


