கோலாலம்பூர், டிச 2- நாட்டின் பொதுப்பணி அமைச்சராக பதவி வகித்து வரும் டத்தோஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கீக்கு கூடுதல் அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் அவர் தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் பொறுப்பினையும் அவர் ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சராகப் பதவி வகித்த டத்தோ ஈவோன் பெனடிக், தான் வகித்த பதவிக் காலத்தில் ஆற்றிய பங்களிப்புக்கும், சேவைக்கும் அரசாங்கம் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான ஈவோன் பெனடிக் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துறையின் துணையமைச்சராக டத்தோஶ்ரீ ஆர்.ரமணன் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
