மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கல் எறிந்து காரின் கண்ணாடியை உடைத்தார்

2 டிசம்பர் 2025, 4:54 AM
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கல் எறிந்து காரின் கண்ணாடியை உடைத்தார்

ஷா ஆலம், 2 டிசம்பர்: சிங்கப்பூர் நாட்டு ஆடவர் என நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், மலேசியா–சிங்கப்பூர் இரண்டாம் இணைப்புச் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது கல் எறிந்து அதன் பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

30 வயதான கார் உரிமையாளர் நேற்று போலீஸ் புகார் அளித்துள்ளதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் எம். குமாரசன் உறுதிப்படுத்தினார். 24 வினாடி காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் திடீரென வழி மாறியதால், கார் ஓட்டுனர் ஹார்ன் அடித்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காரை பின்தொடர்ந்து, பின்னர் கல் எறிந்து பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. “யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அவரது செயல் பொது பாதுகாப்பிற்கு ஆபத்தானதுடன், சொத்துச் சேதத்திற்கும் காரணமாகிறது என்று குமாரசன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 427 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒன்று முதல் ஐந்து ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள் அல்லது தகவல் கொண்டவர்கள் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு மையத்தை 07-5113622 என்ற எண்ணிலும் அல்லது 24 மணி நேர ஹாட்லைன் 07-5114486 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு குமாரசன் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.