ஷா ஆலம், 2 டிசம்பர்: சிலாங்கூர் செலாயாங் நகர சபையின் 523 பணியாளர்கள் சமீபத்தில் கோம்பாக் மாவட்ட தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகமை (AADK) மற்றும் ஒழுக்கப் பிரிவு இணைந்து நடத்திய மூன்று நாள் சிறுநீர் பரிசோதனையில் பங்கேற்றனர்.
நவம்பர் 24 முதல் 26 வரை நடைபெற்ற இந்த பரிசோதனை, பணியாளர்கள் போதைப்பொருள் இல்லா கொள்கையை கட்டாயமாகப் பின்பற்றுவதையும், உயர்ந்த ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது என்று MPS தெரிவித்தது.
ஒவ்வொரு பணியாளருக்கும் நடைபெற்ற சிறுநீர் பரிசோதனை AADK நிர்ணயித்த நடைமுறைகளின் படி மேற்கொள்ளப்பட்டது. எந்தத் தடங்கலும் இல்லாமல் சீராக நிறைவேறியது என்று அவர்கள் சமூக தளத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனையின் முழுமையான முடிவுகள் தற்போது AADK உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளதாகவும், உறுதிப்படுத்தப்பட்டவுடன் அந்த அறிக்கை உடனடியாக நகர சபைக்குக் கையளிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இதற்கிடையில், ஒழுக்கப் பிரிவு தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளின்படி மேற்கொள்ளும் என்றும் MPS தெரிவித்துள்ளது.


