ஷா ஆலம், டிச 2: ஶ்ரீ செத்தியா தொகுதியில் அடுத்த கல்வியாண்டுக்கான பேக் டு ஸ்கூல் (Back To School) திட்டத்தின் விண்ணப்பம் நேற்று முதல் டிசம்பர் 14 வரை திறக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2026 கல்வியாண்டுக்கான பள்ளி ஏற்பாடுகளை செய்ய குறைந்த வருமானக் கொண்ட குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அந்த தொகுதியின் மக்கள் பிரதிநிதி டாக்டர் பாஹ்மி ஙா கூறினார்.
“பதிவு தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எண் 31D-3, கிளானா மால், ஜாலான் SS6/12, கிளானா ஜெயாவில் நடைபெறும்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகள்:
* விண்ணப்பதாரர் ஶ்ரீ செத்தியா தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்
* குடும்ப வருமானம் RM4,000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்
* பிங்காஸ் அல்லது SMUE உதவித்திட்டங்களைப் பெறாதவர்களாக இருக்க வேண்டும்
* ஒரு குடும்பத்தில் ஒரு பெறுநருக்கு மட்டுமே உதவி வழங்கப்படும்
* 16 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளின் மை கிட்/மை கார்ட் மற்றும் பெற்றோரின் அடையாள அட்டையின் நகல்களை விண்ணப்பதாரர் கொண்டு வர வேண்டும்
இத்திட்டத்திற்கு போஸ்டரில் வழங்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கான் செய்து இணையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள், கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகள் கல்வியாண்டை சிறந்த முறையில் தொடங்க உதவுவதற்காக நடத்தப்படுகிறது.


