கோலாலம்பூர், டிச 2 -தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் அவர்களின் புதிய பொறுப்பு குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் டிசம்பர்3ஆம் தேதி புதன்கிழமை அறிவிப்பு ஒன்றை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளையோடு அனைத்துலக வாணிப, தொழிற்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து தெங்கு ஸப்ருல் ஒரு நிறைவை அடைகிறார்.
இத்தனை வருடங்கள் அவர்கள் அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தனது அமைச்சர் பதவியை திறம்பட வழிநடத்தினார் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 2020ஆம் ஆண்டு தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், செனட்டராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார்.
பிறகு 2022ஆம் ஆண்டு தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் அனைத்துலக வாணிப மற்றும் தொழிற்துறை அமைச்சராக் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


