இந்திய, டிச 1 - இந்தியாவில், தமிழ்நாட்டை தாக்கிய டித்வா புயலால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் சுமார் 150 கால்நடைகள் பலியாகின என தகவல் வெளியாகியுள்ளன.
தொடர் கனமழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல், 56,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் 38 தற்காலிக நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்று காலை வரை மொத்தம் 2,393 பேருக்கு தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 28 மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார்நிலை பணிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், கூடுதலாக 10 குழுக்களும் கோரப்பட்டுள்ளன.
பெர்னாமா


