தானா மேரா, 1 டிசம்பர்: ஈப்போ குவால் லில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதியம் நடந்த சம்பவத்தில், கணவரால் குத்தப் பட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உயிரிழந்தார்.
40 வயதான அந்தப் பெண், மதியம் 1 மணியளவில் அந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. சுற்று வட்டாரங்களின் தகவலின்படி, 63 வயதான சந்தேக நபர், சம்பவத்திற்குப் பின்னர் அங்கயே போலீசால் கைது செய்யப்பட்டார் என பெரித்த ஹரியான் தெரிவித்துள்ளது.
பெண் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு சரிந்து விழுந்ததாக நம்பப்படுகிறது. அவரது உடல் தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேதப் பரிசோதனை நடைபெறுகிறது. இதற்கிடையில், தானா மேரா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரிண்டெண்ட் மொஹ்த் ஹாக்கி ஹஸ்புள்ளா இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தி, உண்மை காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


