எதிர் வழியில் லாரி ஓட்டி தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநர் போலீசால் கைது

1 டிசம்பர் 2025, 9:48 AM
எதிர் வழியில் லாரி ஓட்டி தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநர் போலீசால் கைது

ஷா ஆலம், 1 டிசம்பர்: புக்கிட் பெருந்துங் கட்டண நிலையத்திலிருந்து சுங்கை புலோ கட்டண நிலையம் வரை, சுமார் 150 கிலோமீட்டர் தூரம் எதிர் வழியில் லாரியை ஓட்டிய ஒரு ஓட்டுநர் போலீசால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை 5.35 மணிக்கு நடந்தது.

ரோந்துப் பணியாளர்கள் அறிவுறுத்திய போதிலும், சம்பந்தப்பட்ட மிட்சுபிஷி ஃபுசோ லாரி நிறுத்த மறுத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக   உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் இப்ராஹிம் ஹுசின் தெரிவித்தார்.

அவரது விளக்கத்தில் கூறியதாவது, சந்தேகநபர் புக்கிட் பெருந்துங் கட்டண நிலையம் வழியாக வட-தெற்கு அதிவேகப் பாதையில் நுழைந்து, கோலாலம்பூர் திசைக்கு எதிர் வழியில் பாய்ந்தார். பின்னர் சுங்கை பூலோக் கட்டண நிலையம் அடைந்ததும் மீண்டும் திரும்பி அதே திசையில் செலுத்தினார்.

சந்தேகநபர் வெறும் கவனக்குறைவாக ஓட்டவில்லை; அவரை நிறுத்த முயன்ற போலீஸ் ரோந்து வாகனத்தை மோத முயன்றார் என்று அவர் கூறினார். பின்னர், அந்த நபர் போலீசாரால்  கைது செய்யப்பட்டார். தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணையில், சந்தேகநபருக்கு முன்பு இரண்டு போதைப்பொருள் தொடர்பான பதிவுகளும், ஒரு குற்றச் செயலுக்கான பதிவும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பேட்டமைன் (ஷாபு) உட்கொண்டது தெரியவந்தது.

“இந்த வழக்கு, கொலை முயற்சி தொடர்பான பிரிவு 307, பணியில் இருந்த அதிகாரிகளைத் தடுக்குதல் தொடர்பான பிரிவு 186 மற்றும் ஆபத்தான ஓட்டுதல் குறித்த சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42(1) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.