ஷா ஆலம், டிச 1 — கம்போங் பண்டான், லோரொங் 5 பகுதியில் உள்ளூர் ஆடவர் ஒருவரை தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மியான்மர் நாட்டை சேர்ந்த இரண்டு ஆண்களை காவல்துறை நேற்று கைது செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இரவு 12.01 மணிக்கு புகார் பெறப்பட்டதாக வாங்சா மாஜு மாவட்டக் காவல்துறை தலைவர், உதவி கமிஷனர் முகமட் லாஸிம் இஸ்மாயில் கூறினார்.
“22 வயதான பாதிக்கப்பட்ட உள்ளூர் ஆடவர், தலை மற்றும் இடது கைப் பாதத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மயக்க நிலையில் சாலையில் காணப்பட்டார்.
“அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 2.33 மணிக்கு மரணம் அடைந்ததாக உறுதி செய்யப்பட்டது,” என்று முகமட் லாஸிம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இச்சம்பவத்தின் நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு குற்றச் சட்டப் பிரிவு 302ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
“இருவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 117ன் கீழ் மூன்று நாட்கள், அதாவது டிசம்பர் 2 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.


