ஈப்போ, டிச 1- சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கிண்ண போட்டி ஈப்போவில் நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதியாட்டம் முடிந்தது.
இறுதியாட்டத்தில் பெல்ஜியம் அணியும் இந்தியா அணியும் மோதிய நிலையில் பெல்ஜியம் அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வாகை சூடியது.
31ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணி முதன் முறையாக வெற்றி வாகை சூடியது
இந்தியா கடந்த 2010ஆம் ஆண்டு இந்த கிண்ணத்தை வாகை சூடியது. இந்த முறை கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் இந்தியா களமிறங்கினாலும் தோல்வியே மிஞ்சியது.
மூன்றாவது நான்காவது இடத்தைத் தீர்மானிக்கும் ஆட்டமும் நடைபெற்றது. அவ்வாட்டத்தில் மலேசியாவை நியூசிலாந்து அணி 1-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டது


