புத்ராஜெயா, 1 டிசம்பர்: சுபாங் ஜெயா 2035 உள்ளூர் திட்டத்திற்கான வரைவு, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் விளம்பர திட்டத்துடன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரைவு டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை பொதுமக்கள் அணுக கூடியதாக இருக்கும்.
துணை மேயர் தெரிவித்ததாவது, இந்த பொதுமக்கள் பங்கேற்பு திட்டம், உள்ளூர் வளர்ச்சி திட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் எதிர்ப்புகளை முன்வைக்கக்கூடிய முக்கிய தளம் ஆகும். வரைவு ஆவணங்கள் மற்றும் தகவல்கள் நகர மன்றத்தின் தலைமையகத்தின் பிரதான லாபியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.
மேலும், வரைவு ஆவணங்கள், எதிர்ப்பு படிவங்கள் மற்றும் திட்ட மாற்ற விவரங்களுக்கான QR குறியீடு கொண்ட பேனர்கள் (பண்டிங்) மற்ற ஐந்து இடங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. சுபாங் ஜெயா மாநகர சபை இதுவரை 150 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதுடன், அவற்றிலிருந்து 85 விண்ணப்பங்கள் மட்டுமே சிரத்தையுடன் பரிசீலனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை முக்கியமாக நிலப்பயன்பாட்டு மாற்றங்கள், மண்டல மாற்றம், நிறுவனம் குறித்த நிலத்தை வணிகமாக மாற்றுதல், வீடுகளை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றுதல் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியவை.
இதில் பொதுமக்கள் பங்கேற்பு காலம் முடிந்ததும், பெறப்பட்ட அனைத்து கருத்துகள் மற்றும் எதிர்ப்புகளும் வரவிருக்கும் உள்ளூர் விசாரணை குழுக் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த கூட்டம் மாநில உள்ளூர் நிர்வாக முகவரால் தலைமை தாங்க படவுள்ளது மற்றும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


