ஷா ஆலம், டிச 1: நேற்று மஞ்சுங், கம்போங் கோ என்ற பகுதியில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் மண்வெட்டி மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அம்முதியவர் வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இச்சம்பவத்தை பற்றிய தகவல் அம்முதியவரின் குடும்ப உறுப்பினரால் பிற்பகல் 1:30 மணியளவில் தெரிவிக்கப்பட்டது என மஞ்சுங் காவல் துறையின் தலைவர், உதவி கமிஷனர் ஹாஸ்புல்லாஹ் அப்துல் ரஹ்மான் கூறினார்.
அந்த முதியவர் தரையில் இரத்தத்தால் சூழப்பட்ட நிலையில், உடல் மற்றும் முகத்தில் காயங்களுடன் காணப்பட்டார்.
"உடல் ராஜா பெர்மைசுரி பைனுன் (HRPB) மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள்தான் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டதாக" ஹாஸ்புல்லாஹ் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக 302 குற்றச்சாட்டு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
"இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்க விரும்பினால், உதவி சூப்பிரண்டன்ட் முகமட் அசாலான் அப்துல் காரிமை 019-3927837 அல்லது மஞ்சுங் காவல் நிலையத்தை (IPD) 05-6886222 அல்லது வாட்ஸ்அப் ஹாட்லைன் 017-6828005 மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.


