கோலாலம்பூர், டிச 1- மலாயாப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 2025இல் நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை மலாயாப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மேன்மை தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அவர்கள் வழங்கினார்.
நீதித்துறையில் அவரின் சேவையைப் போற்றும் விதமாக இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மலாயாப் பல்கலைக்கழகத்தில் தற்போது 65ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.


