வாகன அணுகல் மேலாண்மை அமைப்பு கே.எல்.ஐ.ஏ.வில் முழுமையாக அமல்

1 டிசம்பர் 2025, 4:37 AM
வாகன அணுகல் மேலாண்மை அமைப்பு கே.எல்.ஐ.ஏ.வில் முழுமையாக அமல்

புத்ராஜெயா, டிச 1: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) மேற்கொண்ட மூன்று மாதச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதன் வாகன அணுகல் மேலாண்மை அமைப்பு இன்று முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனைக்காலம் போது, விமான நிலைய முன்புறச் சாலைகளில் ஏற்பட்ட நெரிசல் கணிசமாகக் குறைந்தது.

10 நிமிட வரம்பை மீறி, பயணிகளை ஏற்றும் மற்றும் இறக்கும் தளங்களில் நீண்ட நேரம் நின்ற வாகனங்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக கடுமையாகக் குறைந்தது.

இச்சோதனை ஓட்டுநர்களின் நடத்தை மாற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதை இது காட்டுகிறது என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) தெரிவித்தது.

இந்த சோதனை தரவு தெளிவாகவே இந்த அமைப்பின் முழுமையான அமலாக்கம் அவசியமானது என்பதை நிரூபிக்கிறது, அதில் குறிப்பாக வருட இறுதி பயணங்களுக்கு முன்பாகவும், மலேசியா வருகை ஆண்டு 2026-ஐ முன்னிட்டு கூடுதல் ஒழுங்குமுறையை உறுதிசெய்யவும் தேவை என்று அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்டத்தோ முகமது இசானி கானி கூறினார்.

மேலும் VAMS அமைப்பு எண் தகடுகளை தானாகவே பதிவுசெய்து, வாகனங்கள் நுழைந்த நேரத்திலிருந்து வெளியேறும் வரை உள்ள மொத்த நிறுத்த நேரத்தை கணக்கிடும். 10 நிமிட இலவச அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, நிறுத்த நேர அளவினைப் பொறுத்து குறைந்தபட்சம் RM10 முதல் RM100 வரை கட்டணம் விதிக்கப்படும். கட்டணங்கள் Touch ’n Go, கிரெடிட் கார்ட் அல்லது MyDebit வழியாகச் செலுத்தப்படலாம்.

இந்த கட்டுப்பாடு பயணிகளின் பாதுகாப்பையும், சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் என MAHB தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.