கோலாலம்பூர், டிச 1 - இன்று முதல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களின் கைத்தொலைபேசி செயலிகளில் ``MyDigital ID`` அடையாளச் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளன. இது பயனர்களை மேலும் பாதுகாக்கவும், போலி அடையாளம் அல்லது மோசடியையும் தவிர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை மூலம், புதியதாக வாங்கப்படும் அனைத்து முன்பணம் (prepaid) சிம் அட்டைகளும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயலிகளில் ``MyDigital ID`` மூலம் சரிபார்க்கப்பட வேண்டும். இது பிறரின் அடையாளத்தைத் தவறாக பயன்படுத்தி SIM அட்டை பதிவு செய்வதைத் தடுக்கிறது.
இதற்கு முன்பு, சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்பணம் சிம் அட்டை பதிவு செய்வதற்காக பிறரின் அடையாளத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ``MyDigital ID`` ஒருங்கிணைப்பு நடவடிக்கை இந்த பிரச்சனையைத் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்த புதிய நடவடிக்கை மூலம் பயனர்கள் தங்களின் மைகார்ட் அடையாள அட்டை எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து (prepaid) எண்களையும் சரிபார்த்து, அவை உண்மையில் அவர்களுக்கு சொந்தமானதா என்பதை உறுதிசெய்யவும் முடியும்.


