ஷா ஆலம், டிச 1 - சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த தகவலை சமூக நல இலாகாவின் இன்ஃபோ பென்சானா அகப்பக்கம் தகவலைத் தெரிவித்தது.
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை 2,574ஆக குறைந்துள்ளது.
சிலாங்கூரின் கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வாக உள்ளது. அங்கு 2,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 17 பி.பி.எஸ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


