கோல திரங்கானு, நவம்பர் 30 — மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் வெள்ளம் ஏற் பட்டாலும் போதுமான பணியாளர்களைக் கொண்டு பதிலளிக்கத் தயாராக உள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு செயல்பாடுகள் இயக்குநர் நோர்டின் பௌசி கூறுகையில், அப்படியொரு நிலை ஏற்பட்டால், பணியாளர்-களை 12 மணி நேரப் பணி முறையிலிருந்து 24 மணி நேரத் தொடர் பணி முறைக்கு மாற்றுவோம் என்றார். “எனினும், சமீபத்தில் டைபூன் சென்யார் புயல் ஏற்பட்டபோது, அதுவே பருவமழைக் காலத்துடன் ஒத்துப்போய் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போதும் நாங்கள் 24 மணி நேரப் பணி முறைக்கு மாற வேண்டியி-ருக்கவில்லை. “இது நமது மனிதவளத்தை இன்னும் 100 சதவீதம் பயன்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது.
எங்கள் பணியாளர்கள் கூடுதல் நேரம் (ஓவர்டைம்) பணியாற்ற முடியும்,” என்று அவர் கூறினார். இன்று திரங்கானு JBPM தலைமைய-கத்தில் உள்ள பேரிடர் செயல்பாட்டு அறையை பார்வையிட்டு, தற்போதைய வெள்ள நிலவரம் குறித்த விளக்கவுரையில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
மேலும் நோர்டின் கூறுகையில், மீட்பு மற்றும் வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களை வெளியேற்றும் பணிகள் சுமூகமாக நடை பெறுவதை உறுதி செய்யும் வகையில் உபகரணங்களும் உத்தியியல் ரீதியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் தங்களது உபகரணங்களின் எண்ணிக்கை, செயல்திறன் மற்றும் பயன்-பாட்டுக்கு தயார் நிலை ஆகியவற்றை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.”தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (Nadma) ஒருங்கிணை-ப்பின் கீழ் எந்த நேரத்திலும் திரட்டப் படத் தயாராக அனைத்து மீட்பு நிறுவனங்களும் தங்களது உபகரணங்களுடன் முழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.


