ஷா ஆலம், நவம்பர் 30 — சிலாங்கூர் மாநில காவல்துறை, நேற்றிரவு கிள்ளான் செலாத்தான் பகுதியில் உள்ள தாமான் மெஸ்ரா இந்தான் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்திருப்பதை உறுதிப் படுத்தியுள்ளது.
சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கிள்ளாங் செலாத்தான் மாவட்டக் காவல்துறைத் தலைமையக (IPD) கட்டுப்பாட்டு மையம் நேற்றிரவு 8.35 மணிக்கு இந்தத் தகவலை பெற்றது.“இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது.பொதுமக்கள் யாராவது இந்தச் சம்பவத்தைப் பார்த்திருந்தால் அல்லது தொடர்புடைய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், விசாரணைக்கு உதவ முன்வந்து தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மூத்த குற்றப் புலனாய்வு அதிகாரி உதவி ஆணையர் முகமட் ஹார்மன் முகமட் ஹனிஃப் (019-2100334) அல்லது கிள்ளாங் செலாத்தான் IPD செயற்பாட்டு அறை (03-33762222) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, நேற்றிரவு இங்கு அருகே உள்ள தாமான் மெஸ்ரா இந்தாவில் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் (four-wheel drive) ஒரு ஆண் சடலமாகக் கண்டெடுக்கப் பட்டதாகவும், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இருக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.இந்த வழக்கு தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.


