கோத்தா கினபாலு, 30 நவம்பர்: சபா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இஸ்தானா ஸ்ரீ கினபாலுவின் முதன்மை நுழைவாயில் இன்று இரவு முழுவதும் போலீசாரால் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு வாக்களிப்பு முடிந்ததும், மாலை 6 மணி முதல் ஊடகவியலாளர்கள் இஸ்தானா வெளியே திரண்டு செய்தி சேகரித்து வருகின்றனர். தற்போது சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
நுழைவாயிலில் ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆதரவாளர்களும் தங்கள் கட்சித் தலைமையகங்களில் திரண்டு வருகின்றனர்:- பாரிசான் நேசனல் (BN) → அம்னோ சபா கட்டிடம் - கபூங்கான் ராக்யாட் சபா (GRS) → முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ கயா -
பாக்காத்தான் ஹராப்பான் → ஹோட்டல் பசிபிக் சுட்டேரா (இங்கு PKR பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் புசியா சால்லே, அமானா தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு, PKR சபா தலைவர் டத்தோ முஸ்தபா சாக்முட் ஆகியோர் வருகை தந்துள்ளனர்)மாநில அரசு அமைப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் இஸ்தானா விலிருந்து எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.



