சபா மாநில சட்டமன்ற தேர்தலில் ஜ.செ.க DAP போட்டியிட்ட அனைத்து 8 தொகுதிகளிலும் படு தோல்வி

29 நவம்பர் 2025, 6:57 PM
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் ஜ.செ.க DAP போட்டியிட்ட அனைத்து 8 தொகுதிகளிலும்  படு தோல்வி

கோலாலம்பூர், 30 நவம்பர்: சபா மாநில சட்டமன்ற தேர்தலில் ஜ.செ.க DAP போட்டியிட்ட அனைத்து 8 தொகுதிகளிலும் படு தோல்வி, வாக்காளர்களின் தீர்ப்பை மதிக்கிறோம் என்கிறர் அந்தோணி லோக்

சபா மாநிலத் தேர்தலில் (PRN 17) ஜ.செ.க போட்டியிட்ட அனைத்து 8 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

ஜ.செ.க பொதுச்செயலாளர் அந்தோணி லோக் வெளியிட்ட அறிக்கையில்:

“எட்டு தொகுதிகளிலும் வாக்களித்த மக்களின் முடிவை ஜ.செ.க முழுமையாக ஏற்றுக்கொள்கிறது மற்றும் மதிக்கிறது.

வெற்றி பெற்ற கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஜ.செ.க வின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

கட்சியின் உயர்மட்டத் தலைமை இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எங்கள் பலவீனங்களை ஆராய்ந்து, அடுத்த தேர்தல்களில் மக்களின் ஆதரவை மீண்டும் பெற கடுமையாக உழைக்கும்.

DAP சபா போட்டியிட்ட எட்டு தொகுதிகள்:

·தற்போது வைத்திருந்த 6 தொகுதிகள்: லுயாங், காப்பாயான், லிக்காஸ், தஞ்சோங் பாப்பாட், எலோபுரா, ஸ்ரீ தஞ்சோங்

·புதிய இரண்டு தொகுதிகள்: தஞ்சோங் ஆரு, கெமபோங்

இருப்பினும், கோத்தா கினபாலு மற்றும் சண்டாக்கான் பகுதிகளில் ஜ.செ.க இன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மக்களுக்காக இரட்டிப்பு முயற்சியுடன் பணியாற்பார்கள்.

கட்சியின் பொதுச்செயலாளராக, சபா மாநிலத் தேர்தலில் ஒரு தொகுதியையும் வெல்ல முடியாத இந்தத் தோல்விக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அந்தோனி லோக் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.