புத்ரா ஜெயா, நவம்பர் 28 — மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இன்று காலை பூச்சோங் இல்லத்தில் வணிகர் ஆல்பர்ட் டேய்யை கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தியது.
அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி, கைது நடைமுறை விதிகளின் படி திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றார்.“எனினும், கைது செய்யும் போது எங்கள் அதிகாரிகள் டேய் மீது துப்பாக்கி முனையை நீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டை MACC முற்றிலும் மறுக்கிறது” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த அவதூறான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்காக காவல்துறையில் புகார் அளிக்க பட்டுள்ளதாகவும் ஆசம் கூறினார். ஆணையத்தின் விசாரணையைப் பாதிக்கக்கூடிய தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, MACC அதிகாரிகள் டேய்யின் வீட்டில் சோதனை நடத்திய பின்னர் அவரை கைது செய்ததாக செய்தி வெளியாகியிருந்தது.


