நேற்று இரவு  வரை ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

29 நவம்பர் 2025, 2:48 AM
நேற்று இரவு  வரை ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
நேற்று இரவு  வரை ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
நேற்று இரவு  வரை ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கோலாலம்பூர், நவம்பர் 28 — திரங்கானு, சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான், பேராக் ஆகிய மாநிலங்களில் இன்று இரவு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள வெள்ள பாதிப்பு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதேவேளையில் பெர்லிஸ், கிளாந்தான், கெடா ஆகிய மாநிலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது.திரங்கானுவில் இரவு 8 மணி நிலவரப்படி 2742 குடும்பங்களைச் சேர்ந்த 8909 பேர் வெள்ள பாதிப்புக்குள்ளாகி நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், மதியம் இது 1913 குடும்பங்களைச் சேர்ந்த 6335 பேர் மட்டுமே இருந்தது.

இவர்கள் கெமாமான், மாராங், கோலா திரங்கானு, கோலா நுருஸ், செத்தியு, டுங்குன், உலு திரங்கானு, பெசுட் ஆகிய பகுதிகளில் உள்ள 119 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோலா திரங்கானு நகரில் ஜாலான் கமாலுடின்-ஜாலான் பத்து புரோக், ஜாலான் பெங்காடாங் ஆகார்-திரங்கானு காவல்துறை தலைமையகம் -விஸ்மா டாருல் அமான் உள்ளிட்ட பல சாலைகள் சிறிய வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை தலைவர் சூப்பிரண்டெண்ட் அஃபாண்டி ஹுசின் தெரிவித்தார்.

சிலாங்கூரில் 973 குடும்பங்களைச் சேர்ந்த 3542 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர், மதியம் இது 838 குடும்பங்களைச் சேர்ந்த 3125 பேர் மட்டுமே. கிள்ளான், கோலா சிலாங்கூர், சபாக் பெர்ணம், சிப்பாங், கோலா லங்காட் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 27 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

பகாங்கின் 538 குடும்பங்களைச் சேர்ந்த 1705 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர், மதியம் 333 குடும்பங்களைச் சேர்ந்த 1066 பேர் மட்டுமே. குவாந்தானில் 218 குடும்பங்களைச் சேர்ந்த 639 பேர் 11 நிவாரண மையங்களில், மாரானில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் 7 மையங்களிலும், ராவுபில் 102 குடும்பங்களைச் சேர்ந்த 336 பேர் 17 மையங்களில், லிப்பிஸ் 121 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 12 மையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பேராக்கில் 1980 குடும்பங்களைச் சேர்ந்த 6429 பேர் ஆறு மாவட்டங்களில் உள்ள 47 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், மதியம் 1663 குடும்பங்களைச் சேர்ந்த 5503 பேர் மட்டுமே. மஞ்சோங் மாவட்டத்தில் மட்டும் 686 குடும்பங்களைச் சேர்ந்த 2260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலானில் 127 குடும்பங்களைச் சேர்ந்த 313 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர், மதியம் 47 குடும்பங்களைச் சேர்ந்த 156 பேர் மட்டுமே, அனைவரும் 7 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பெர்லிஸில் பாதிப்பு எண்ணிக்கை 7345 லிருந்து 7116ஆகக் குறைந்துள்ளது, பாடாங் பெசார், காங்கார், அராவ் ஆகிய இடங்களில் 24 நிவாரண மையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

கிளாந்தானில் 3484லிருந்து 1273 குடும்பங்களைச் சேர்ந்த 3448 பேராகக் குறைவு, தும்பாட், பாசீர் மாஸ், தானா மேரா, கோலா கிராய், மச்சாங், குவா மூசாங் ஆகிய இடங்களில் 19 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். இருப்பினும் இரவு 8.15 மணி நிலவரப்படி சுங்கை கோலோக் ரந்தாவ் பஞ்சாங், சுங்கை குசியால் ,குசியால் பாரு தானா மேரா, சுங்கை காலாஸ் லிமாவ் காஸ்துரி குவாமூசாங், சுங்கை கிளாந்தான் கோலா கிராய் ஆகிய நதிகள் இன்னும் ஆபத்து, எச்சரிக்கை மற்றும் விழிப்பு மட்டங்களுக்கு மேல் உள்ளன.

கெடாவில் 4280 லிருந்து 1193 குடும்பங்களைச் சேர்ந்த 3758 பேராகக் குறைவு, குபாங் பாசு, கோத்தா ஸ்டார் , பொக்கோ செனா ஆகிய இடங்களில் 18 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

மலாக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 4 குடும்பங்களைச்  சேர்ந்த 20லிருந்து 74 குடும்பங்களைச் சேர்ந்த 232 பேராக உயர்வு, அலோர் காஜா மற்றும் மலாக்கா தெங்கா ஆகிய இடங்களில் எட்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அவை எஸ் கே மஸ்ஜிட் தானா, எஸ்ஆர்எம் ஜைம் ஜெலதாங் மஸ்ஜிட் அர் ரஷிடின், டெவான் பெருன் ஆயர் லிமாவ், எஸ் கே ஆயர் ஜெர்னிஹ், ஸ்ரீ ஜெராம் பொது மண்டபம், எஸ்கே பிளம்பிங் டாலாம், எஸ்கே கிருபோங், எஸ்கே தாமான் மெர்டேக்கா ஆகிய தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.