கோலாலம்பூர், நவ 28- சென்யார் புயல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 49 மரங்கள் சாய்ந்ததாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாக மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையின் தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ நோர் ஹிஷாம் முஹம்மட் கூறினார்.
இன்று அதிகாலை மலாக்கா, மச்சப் நோக்கிச் செல்லும் Jalan Selandar-இல் முறிந்து விழுந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.
நெகிரி செம்பிலான் அதிக பாதிப்பை கண்டுள்ளது; அங்கு 33 மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள், ஒரு நிலச்சரிவு, ஒரு கட்டமைப்பு இடிபாடு மற்றும் இரண்டு வெள்ளச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மலாக்காவில் 8 மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள், அதைத் தொடர்ந்து சிலாங்கூரில் 5 மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் 2 வெள்ளப் பகுதிகளும், புத்ரா ஜெயாவில் 2 மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும், பேராக் மாநிலத்தில் 1 மரங்கள் முறிந்து விழுந்த சம்பவமும் பதிவாகியுள்ளன.
"முன்னதாகப் பெய்த மழையால் மண் மென்மை அடைந்துள்ளதால், மரங்கள் முறிந்து விழுவதற்கும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளது. சாலைகள் பயணிக்கக்கூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்வதும், பயனாளர்களுக்கு ஆபத்தைக் குறைப்பதும் தற்போது தங்கள் தரப்பு பொறுப்பாகும்," என்று அவர் தெரிவித்தார்.
சென்யார் புயல்; நாடு முழுவதும் 49 மரங்கள் சாய்ந்தாக மலேசிய JBPM தகவல்
28 நவம்பர் 2025, 8:09 AM


