ஜகார்த்தா, நவ 28-இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 82 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 95 பேர் சிறிய மற்றும் கடுமையான காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.
அண்டை மாகாணமான மேற்கு சுமாத்திராவில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சேற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேத மடைந்ததைத் தொடர்ந்து மேலும் 12 பேர் காணாமல் போனதாகவும் அறிவித்துள்ளது.
இந்த SAR நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள், போலிஸார், மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவியாக மோப்ப நாய்கள் மற்றும் மண் குவியல் களை அகற்ற கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
பல பகுதிகள் இன்னும் அணுக முடியாத நிலையில் இருப்பதாலும், நிலையற்ற வானிலை மீட்பு முயற்சிகளைத் தடுத்து வருவதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


