சிரம்பான், நவ 28- சென்யார் புயல் காரணமாக நெகிரி செம்பிலானில் நிலச்சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்தன. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்தது.
சிரம்பான் மற்றும் போர்ட் டிக்சன் பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேச்சாளர், சிரம்பான், Taman Bukit Berlian, Jalan Bukit Berlian 2-இல் உள்ள இரண்டு வீடுகளின் பின்புறத்தில் இன்று அதிகாலை சுமார் 3.50 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அந்த வீடுகளில் வசித்த ஆறு பேர் உடனடியாக வெளியேற்றப் பட்டதாகக் கூறினார்.
சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
மேலதிக இடிபாடுகளை தவிர்ப்பதற்காக, அந்த வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு தீயணைப்புப் படையினர் உத்தரவிட்டனர்.
நிலைமையைக் கண்காணிக்கும் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்யார் புயல் காரணமாக நெகிரி செம்பிலானில் நிலச்சரிவு & மரங்கள் சாய்ந்தன
28 நவம்பர் 2025, 8:06 AM






