ஜெயா, நவ 28- 17 வது சபா மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவானது அன்றைய தினம் நள்ளிரவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
சபா மாநிலத்தில் ஏற்படும் வானிலை காரணமாக தேர்தல் முடிவு வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இருப்பினும், நாளை சனிக்கிழமை, நவம்பர் 29 ஆம் தேதி சபாவில் இடியுடன் கூடிய மழை பொழியும் என்று அனுமாணிக்கப் பட்டுள்ளது என்று மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹருன் கூறினார்.
நாளைய இரவு 10 மணி அல்லது நள்ளிரவு 12 மணி வரைக்கும் மேல் தேர்தல் குறித்த முடிவுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.17வது சபா மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 17 லட்சத்து 60 ஆயிரத்து 417 பேர் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர்.




