கோலாலம்பூர், 28 நவம்பர்: தாய்லாந்தில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 9 முதல் 20 வரை நடைபெற உள்ள SEA Games போட்டிகளுக்காக சோங்க்லாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 10 விளையாட்டுப் பிரிவுகள் பேங்காக்கிற்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென் தாய்லாந்தை தாக்கிய பெருமழை மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, 33வது SEA Games மற்றும் 13வது ASEAN Para Games போட்டிகளின் ஏற்பாட்டு குழுக் கூட்டத்தில் இந்த மாற்றம் இன்று உறுதிப்படுத்தப்பட்டது என்று நேற்றிரவு SEA Games முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
“தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முக்கியமான சேதமும், தயார்நிலை சிக்கலும் ஏற்பட்டதால், குறிப்பாக சோங்க்லா மாநிலத்தில் போட்டிகளை நடத்தும் வசதிகள் பாதிக்கப்பட்டன. சோங்க்லாவிலிருந்து பேங்காக்கிற்கு மாற்றப்படும் 10 விளையாட்டுகள் முய்தாய், கால்பந்து, சதுரங்கம், கபடி, வுஷு, பென்சக் சிலாட், ஜூடோ, பெட்டாங்க், கராத்தே மற்றும் மல்யுத்தம்.


