பெய்ஜிங், நவ 28 - சீனாவின் தென் மேற்கு, யுனான் மாநிலத்தில் ரயில்வே தொழிலாளர்கள் குழு மீது ரயில் மோதியதில் 11 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங்கில் (Kunminng) உள்ள லோயோங் நகரில் நில நடுக்கத்தை கண்டறிதல் கருவிகளைச் சோதித்து கொண்டிருந்தபோது, இரயில் தண்டவாளத்திலிருந்த தொழிலாளர்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே யுனான் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் மீண்டும் இயல்பான சேவைகளை தொடங்கியுள்ளதாகக் குன்மிங் ரயில்வே பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.


