ஷா ஆலாம், நவ 27- கடந்த எட்டு ஆண்டுகளில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 1,361 குடும்பங்கள் 'ஸ்மார்ட் வாடகைத் திட்டம்' (Skim Smart Sewa) மூலம் பயனடைந்துள்ளனர் என்று காஜாங் நகராண்மை கழக உறுப்பினர் திரு. இராமசந்திரன் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள வீட்டுப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மாநில அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம், தேவைப்படும் அதிகமான மக்கள் இந்த வாடகை வீட்டுத் திட்டத்தால் பயனடைவதை மாநில அரசாங்கம் உறுதி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



