பிரேசில், நவ 27 - உலகில் முதன்முறையாக ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்துப்படும் டிங்கி தடுப்பூசிக்கு பிரேசில் அரசு கடந்த புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
கொசுவால் பரவும் டிங்கி தொற்று உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்த தடுப்பூசி ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
டிங்கி காய்ச்சல் கடுமையான உடல் வலி, கடும் சோர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு உலகம் முழுவதும் டிங்கி தொற்றுகளின் பதிவுகள் அதிவேகமாக உயர்ந்ததற்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், பிரேசிலின் சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பு ANVISA, இந்தத் தடுப்பூசியை 12 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி ஒரே முறை செலுத்தினால் போதும் என்பதால், டிங்கி பாதுகாப்பில் இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


