கோலாலம்பூர், நவ 27 — இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு கடற்கரைக்கு அருகில் இன்று பிற்பகல் மணி 12.56 அளவில், ரிக்டர் 6.5 அளவிலான பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று மலேசிய வானிலைத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் வடக்கு 2.7° மற்றும் கிழக்கு 95.9° இடத்தில், 57 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.
“இந்த அதிர்வுகள் மலேசிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை மாநிலங்களில் உணரப்பட்டன,” என்று அத்துறை தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் மெட்மலேசியா அறிவித்துள்ளது.


