சிலாங்கூர் பட்ஜெட் 2026 சுகாதார ஒதுக்கீடு: பொதுமக்கள் வரவேற்பு

27 நவம்பர் 2025, 9:08 AM
சிலாங்கூர் பட்ஜெட் 2026 சுகாதார ஒதுக்கீடு: பொதுமக்கள் வரவேற்பு

ஷா ஆலம், 27 நவம்பர்: சிலாங்கூர் அரசின் புதிய பட்ஜெட் 2026  அடிப்படை சுகாதார சேவைகள் மற்றும் பரிசோதனை திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி, மாநில மக்களிடையே நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. 

குறிப்பாக, 200,000 மாநில மக்கள் அடிப்படை சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி சேவைகளில் நேரடியாகப் பயன் பெறுவார்கள் என்பது குடும்பங்களின் நாளாந்த சுமையை குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

சுங்கை பூலோவில் வசிக்கும் மகேந்திரன் அரிவொலி, இந்த ஒதுக்கீடு சுகாதாரத்தில் மாநிலத்தின் முன்னோடியான அணுகுமுறையை வெளிப் படுத்துவதாகக் குறிப்பிட்டார். மேலும் “அடிப்படை சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் இலவசமாக அல்லது குறைந்த செலவில் வழங்கப் படுவது, குறிப்பாக நடுத்தர மற்றும் தாழ்வார குடும்பங்களுக்கு மிகப்பெரிய தளர்வாக இருக்கும். மருத்துவ செலவுகள் இன்று குடும்பங்களுக்கு மிகப் பெரிய சுமையாக மாறிவிட்டன. 200,000 பேருக்கு இத்திட்டம் வழங்கும் நன்மை கணிசமான மாற்றத்தை உருவாக்கும்,” என மகேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், சிலாங்கூர் சரியான பரிசோதனைத் திட்டம் தொடர்வதற்காக ஒதுக்கப்பட்ட RM2.5 மில்லியன் நிதி மாநிலத்தின் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் என அவர் மதிப்பிட்டார். “பரிசோதனைகள் என்பது நோய்களை  முன்னதாகக் கண்டறியவும் தடுக்கவும் மிகவும் முக்கியம்  என்றார்.

. பலர் உடலில் பிரச்சனை உள்ளதைக் கூட அறியாமல் நடப்பதுண்டு. இது போன்ற பரிசோதனை திட்டங்கள் மூலம், தொற்று நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட முடியும்,” என்று அவர் கூறினார்.

மகேந்திரன் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் நீண்ட கால சுகாதார மேலாண்மைக்கு உதவுவதோடு, மக்கள் ஆரோக்கியம் என்பது வளர்ச்சியின் அடிப்படை என்பதை அரசு புரிந்து கொள்கிறது என்ற உறுதியையும் தருகிறது. 

ஒரு மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த நிதி திட்டம் அந்த நோக்கத்திற்கான சரியான பாதையில்தான் உள்ளது,” என அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

சிலாங்கூர் மக்கள் பலரும், இந்த சுகாதார முன்முயற்சிகள் குடும்பச் செலவை குறைப்பதோடு, சமூகத்தின் முழுமையான நலனையும் உயர்த்தும் என நம்புகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.