பெர்லிஸ் மாநிலத்தில் மோசமடைந்த வெள்ளம்; 7501 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் 

27 நவம்பர் 2025, 8:00 AM

கங்கார், நவ 27- பெர்லிஸ் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 7,501 பேர் இன்னும் மாநிலம் முழுவதும் உள்ள 21 இடைக்கால நிவாரண மையங்களில் (PPS) தஞ்சம் அடைந்துள்ளனர்.

மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகத்தின்படி, கங்கார் பகுதியில்தான் அதிகபட்சமாக 1,318 குடும்பங்களைச் சேர்ந்த 4,474 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக, ஆராவ் பகுதியில் 537 குடும்பங்களைச் சேர்ந்த 1,720 பேரும், படாங் சார் பகுதியில் 389 குடும்பங்களைச் சேர்ந்த 1,307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கங்கார் பகுதியைச் சுற்றி 10 PPS-கள் திறக்கப்பட்டுள்ளன, ஆராவில் ஆறு PPS-களும், படாங் புசாரில் ஐந்து PPS-களும் செயல்படுகின்றன.

கங்கார் பகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஆராவ் மற்றும் படாங் புசார் பகுதிகளின் நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.