கோலாலம்பூர், நவ 27 - நாட்டில் ஆண்களே தற்கொலையில் அதிகம் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ தெரிவித்தார்.
அதில் குறிப்பாக 40 வயதுக்குக் கீழ்பட்ட பணிபுரியும் நபர்களே முன்னணியில் இருப்பதை காட்டுகின்றன.
மேலும், பதிவான 5,857 தற்கொலைச் சம்பவங்களில் 80 விழுக்காட்டுக்கும் மேல் ஆண்களை உட்படுத்தியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அவர் பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமில்லாமல், முதியோர் மற்றும் சிறார்களும் தற்கொலையில் ஈடுபடுவதாக தரவுகள் காட்டுகின்றன. எனவே, இது கவலையளிக்கும் பிரச்னையாக மாறி வருவதாக ஹானா கூறினார்.
இதில் சிலாங்கூரில் தான் தற்கொலைச் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்து ஜோகூர், கோலாலம்பூர், பினாங்கு ஆகியவை அடுத்தடுத்த உள்ளன.
இந்நிலையில், தற்கொலைக்கான சாத்தியங்களையும் அறிகுறிகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனை தடுப்பதோடு உரிய உதவிகளையும் வழங்க ஏதுவாக, அமைச்சு ``quick guide`` என்ற வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் தற்கொலைக்கான அறிகுறிகளை கண்டறிந்து ஆரம்ப கட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டத்திற்குப் பிறகு ஹானா இயோ இந்த விரங்களை வெளியிட்டார்.


