ஹாங் காங், நவ 27- ஹாங் காங்கின் தைப்போவில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்புப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், பல வீடுகள் தீக்கிரையானதோடு, குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தானது, மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மூங்கிலால் (bamboo) செய்யப்பட்ட தற்காலிக அமைப்புகளில் ஆரம்பித்து, பின்னர் மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பல கோபுரங்களில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறிய நிலையில், அதிகாரிகள் தீயின் தீவிரத்தை இரண்டாவது மிக உயர்ந்த நிலையான நான்காம் நிலை (Level Four) என அறிவித்தனர்.
தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில், அருகிலுள்ள நெடுஞ்சாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன. கடந்த மாதம், ஹொங்கொங்கின் மத்திய வர்த்தக மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தனித் தீ விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


