பெட்டாலிங் ஜெயா, நவ 27- சிலாங்கூர் எஃப் சி அணிக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனை நிலைநிறுத்தப்படுவதாகவும் அவ்வணி செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்படுவதாகவும் மலேசியக் காற்பந்து சங்கமான எஃப் ஏ எம் தெரிவித்தது.
கடந்த மாதம் நெகிரி செம்பிலான் FC-க்கு எதிரான FA கிண்ண காலிறுதிப் போட்டியின் போது, தங்கள் ரசிகர்களின் நடத்தைக்காக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது
கடந்த நவம்பர் 14-ஆம் தேதி சிலாங்கூர் FC-க்கு விதிக்கப்பட்ட தண்டனைகளான RM100,000 அபராதம் மற்றும் அடுத்த இரண்டு FA கிண்ண உள்ளூர் போட்டிகளை மூடிய அரங்கில் (ரசிகர்கள் இன்றி) விளையாட வேண்டும் என்ற உத்தரவை நிலைநிறுத்துவதாகக் கூறியுள்ளது.
FA கிண்ண காலிறுதிப் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப் சி அணி, நெகிரி செம்பிலான் FC அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தாலும், மொத்தத்தில் 6-3 என்ற கோல் வித்தியாசத்தில் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


