ஷா ஆலம், நவ 14 - சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்படும் ஐ-சீட் திட்டம் அடுத்தாண்டும் தொடர மாநில அரசு 1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு கண்காணிப்பில் அடுத்தாண்டும் குறைந்த வருமானம் ஈட்டும் சிறுதொழில் செய்யபவர்ளை அடையாளம் கண்டு தேவையான வியாபார பொருட்களை வழங்குவதில் ஐசீட் அதிக தீவிரம் காட்டும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என சிலாங்கூர் ஐசீட் ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி (43) தெரிவித்தார்.

இவ்வாண்டு இந்த திட்டத்தில் கீழ் பயன் பெற 164 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அடுத்தாண்டு அதன் எண்ணிக்கையை 200ஆக அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளதாக அவர் விவரித்தார். அதில் தையல், உணவு, பலகாரங்கள், வாகனப் பட்டறை போன்ற தொழிகளில் ஈடுப்பட்டுள்ள சிறு தொழில்முனைவோர் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.
இத்திட்டத்தை தொடர 1 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்த மந்திரி புசாருக்கு ஐசீட் ஒருங்கிணைப்பாளர் என்ற சார்பி்ல் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்.


