சிரம்பான், நவ 27 - நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை (Monsun Timur Laut - MTL) காலத்தில், 123 வெள்ள அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மத் அவர்கள், கனமழை பெய்யும் பட்சத்தில், இந்த அபாயப் பகுதிகளையும், நீர்த்தலை (kepala air) பகுதிகளையும் கண்காணிக்க 385 பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"மாநில அளவில், பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் மற்றும் சொத்துக்களை அடையாளம் காண்பதற்காக நாங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளோம்.
ஏதேனும் சொத்துக்களில் சிக்கல் இருந்தால், மனிதவள உதவி உட்பட, நாங்கள் உடனடியாக அவற்றைச் சீர்செய்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த MTL பருவத்திற்காக, மாநிலத்தில் உள்ள 13 ஏஜென்சிகளில் இருந்து மொத்தம் 6,048 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளனர்.


