ஷா ஆலம், நவ 26 - அடுத்தாண்டு இந்திய சமூகத் தலைவர்களுக்கு 1 மாத கொடுப்பனவு வழங்கப்படும் என 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முன்வைத்த போது டத்தோ மந்திரி புசார் அமிருடின் சாரி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை இந்திய சமூகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தற்போது சந்திக்கும் நிதி சவால்களை இந்த கொடுப்பனவு குறைக்க உதவும் என தெரத்தாய் இந்திய சமூகத் தலைவர் கே. சரஸ்வதி தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், இந்த நற்செய்தி சிலாங்கூர் அரசாங்கம் அனைத்து தரப்பினர் மீதும் கொண்டுள்ள அக்கறையைப் பிரதிபலிக்கிறது என விவரித்தார்.

மேலும், இந்த தொகை தாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட உதவும் என ஜெராம் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் மணிவண்ணன் நம்பிக்கை தெரிவித்தார். இந்த கொடுப்பனவை ஓர் ஊக்குவிப்பாக எடுத்து கொண்டு தான் தொடர்ந்து இந்திய மக்களின் நலனுக்காக செயல்படுவேன் என்றார் அவர்.
இந்திய சமூகத் தலைவர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்காக அவர்கள் இருவரும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அமிருடின் சாரிக்கு தங்களின் நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொண்டனர்.


