லண்டன், நவ 26- ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் தோல்வி கண்டனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் செல்சி அணியிடம் தோல்வி கண்டனர்.
செல்சி அணியின் வெற்றி கோல்களை எதிரணி ஆட்டக்காரர் ஜுலாஸ் குவாண்டே, எஸ்தாவோ, லியாம் டெலாப் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் போடோ கிளைண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நபோலி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கராபேக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.


