தோக்கியோ, நவ 26 - செவித்திறன் குறைப்பாடு கொண்டவர்களுக்கான 2025 தோக்கியோ டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் கராத்தே பிரிவில் நாட்டின் தேசிய வீரர், வி.இளமாறன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தோக்கியோவின் புடோகனில் நடைபெற்ற இப்போட்டியில், ஆடவருக்கான 84 கிலோகிராம், தனிநபர் குமித்தே பிரிவின் இறுதி சுற்றில் இளமாறன் திறமையாக சண்டையிட்ட போதிலும் உக்ரேன் வீரரைத் தோற்கடிக்க முடியாமல் 4-1 என்ற புள்ளிகளில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
இருப்பினும், மலேசியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
இப்போட்டியில், ஏற்கனவே ஆடவர் இரட்டையர் பிரிவு போலிங்கில் மலேசியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றிருக்கும் நிலையில், தற்போது காராத்தேவில் வெள்ளிப் பதக்கம் பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா


