ஷா ஆலம், 26 நவம்பர்: கங்கார் அருகே உள்ள ஸ்ரீ புத்ரா வளாகத்திற்கு அருகே ஜாலான் பெர்சியராண் வாவாசானில் போலீஸ் வாகனம் இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதி ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார் மற்றொருவர் காயத்துக்கு உள்ளாகினார். சம்பவத்திற்கு பின்னர் அந்த போலீஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இரவு 10.20 மணியளவில் அந்த போலீஸ் வாகனம் ரோந்து பணியில் இருந்த போது ஏற்பட்டது என்று கங்கார் மாவட்ட காவல் தலைவர் உதவி கமிஷனர் யூஷரிபுதின் மோஹட் யூசுப் கூறினார். மேலும் சம்பவ ம் குறித்து ஆரம்ப விசாரணையில் போலீஸ் வாகன ஓட்டுநரின் கவனக்குறைவினால் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி மேல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தை கண்டவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறுகாவல் துறை பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் உடல் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹஹிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


