பெட்டாலிங் ஜெயா, 26 நவம்பர்: ஆம் பேங் தாமான் மலூரி கிளை முன்பாக நடைபாதையில் படுத்திருந்த ஆடவர் மீது தண்ணீர் ஊற்றி, எட்டி உதைக்கும் ஒரு காணொளி வைரலானதைத் தொடர்ந்து, ஆம் பேங் இன்று மன்னிப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தங்களை “மிகுந்த கவலை மற்றும், வருத்தமளித்தது” என்றும், எந்த மனிதரும் இப்படிப் பட்ட அணுகுமுறைக்கு ஆளாகக் கூடாது என்றும் அதன் வருத்தத்தை வங்கிக் குழுமம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
காணொளியில், அந்த மனிதர் வங்கிக் கிளை அருகிலுள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பாதுகாவலர் அவர்மீது தண்ணீர் பீச்சுவதும், பின்னர் மற்றொரு நபர் அவரை காலால் உதைப்பதை காட்டும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. காணொளியில் காணப்பட்ட பாதுகாவலர் வங்கியால் நியமிக்கப்பட்ட வெளிப்புற பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பணியாளராகும்; இரண்டாவது நபர் காலணித் தைப்பவர் என நம்பப்படுகிறது.
மேலும் ஆம் பேங் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.


