வாஷிங்டன், நவ 26 - சீன அதிபர் சீ ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்தார். மேலும், ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கிற்கு வருகை புரிவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
அத்தொலைபேசி உரையாடலில் உக்ரேன் - ரஷ்யா விவகாரம், fentanyl, சோயாபீன்ஸ் மற்றும் பிற விவசாய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்ததாக டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ``Truth Social`இல் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், “சீனாவுடன் எங்களுடைய உறவு மிகவும் வலுவானது!” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
பெர்னாமா


