கோலாலம்பூர், நவ 26- தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரும் கார் பந்தய ஆர்வலருமான நடிகர் அஜித்குமார்,2025/26ஆம் ஆண்டுக்கான ஆசியன் லெ மான்ஸ் சீரிஸ் பந்தயத் தொடரில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் Michelin Le Mans Cup, LMP3 பிரிவு சாம்பியனான டீம் விராஜ்அணிக்காக அவர் களமிறங்க உள்ளார்.
Single Seaters மற்றும் GT கார் பந்தயங்களில் அனுபவம் வாய்ந்த அஜித்குமார், இந்தத் தொடரின் முதல் சுற்றான மலேசியாவின் சிப்பாங் பந்தயத்தில் லெ மான்ஸ் புரோடோடைப் பிரிவில் அறிமுகமாகிறார்.
அவர் தனது சக இந்தியரான, முன்னாள் ஃபார்முலா 1 பந்தய வீரர் நாரைன் கார்த்திகேயனுடன் இணைந்து, LMP3 பிரிவில் No1 Ligier JS P325-Toyota காரை ஓட்டவுள்ளார்.
2025/26 ஆசியன் லெ மான்ஸ் சீரிஸ், மலேசியா, துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் மொத்தம் ஆறு பந்தயங்களைக் கொண்டதாக இருக்கும்.
இந்தத் தொடரின் முதல் போட்டி, மலேசியாவின் சிப்பாங்கில் டிசம்பர் 12 முதல் 14, 2025 வரை நடைபெறும் 4 Hours of Sepang பந்தயத்துடன் தொடங்க உள்ளது.


