ஷா ஆலம், நவ 26: கோத்தா டமான்சாரா வனக் காப்பகத்தில் புகைப்பட நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், வருகையாளர்கள் சிலாங்கூர் மாநில வனத்துறை (ஜேபிஎன்எஸ்) நிர்ணயித்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முன்னதாக அப்பகுதி RM2 நுழைவு கட்டணத்துடன் மலை ஏறும் (hiking) நடவடிக்கைக்காக திறக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சமீபத்தில் புகைப்படம் எடுக்க விரும்பும் வருகையாளர்களின் கவனத்தையும் அந்த இடம் ஈர்த்துள்ளது என சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
“புகைப்படங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டால் கூடுதல் கட்டணங்கள் இல்லை,” என்று ஜமாலியா ஜமாலுடின், சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
வன ரேஞ்சர்களை தடுத்து நிறுத்தியதாக அல்லது அதிக கட்டணம் வசூலித்ததாகக் கூறும் புகார் தொடர்பாக கோத்தா டமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் முகமட் இசுவான் காசிம் எழுப்பிய கேள்விக்கு ஜமாலியா இவ்வாறு பதிலளித்தார்.
வாணிப (commercial) நோக்கத்திற்கான புகைப்பட நடவடிக்கைகள் ஜேபிஎன்எஸ் அனுமதி பெற வேண்டும் மற்றும் மாநில அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
“வாணிப நோக்கத்திற்காக எடுக்கப்படும் புகைப்படத்திற்கு கட்டணம் ஒரு நாளைக்கு RM100 மற்றும் படப்பிடிப்பு (filming) நடவடிக்கைகளுக்கு ஒரு நாளைக்கு RM500 ஆகும்.
“இந்த விகிதங்கள் வணிக செயல்பாடுகள் முறையாக நடைபெறவும், வன சூழலின் நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கவும் உருவாக்கப்பட்ட தரநிலை நடைமுறைகளாகும்,” என்று அவர் விளக்கினார்.




